\"ரணிலும் அனுரவும் சேர்ந்து சதி \"- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
\ரணிலும் அனுரவும் சேர்ந்து சதி \ ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு  லங்காசிறி நியூஸ்

நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தான் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தனது வெற்றியை தடுக்க எதிர் கட்சிகள் சதி செய்தாலும் அவர்களின் முயற்சி பலனளிக்காது என குறிப்பிட்டுள்ளார். “சஜித் பிரேமதாசவின் வெற்றியைத் தடுப்பதே இன்று அந்த அரசியல் தம்பதியினரின் ஒரே இலக்கு. அவர்கள் சகல சதிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் முந்தைய அமைச்சரவையில் இருந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் இருவரும் மந்திரிசபையில் ராஜபக்சக்களுடன் அமர்ந்திருந்தனர்” என்று அவர் மேலும் கூறினார்.நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற குழுவுடன் தானோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். "எனவே, 21 ஆம் திகதி, உங்கள் மதிப்புமிக்க வாக்கைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்கு ஒரு முற்போக்கான திருப்புமுனைக்கு முன்முயற்சி எடுங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பிரேமதாச கூறினார்.

மூலக்கதை